17 டிச., 2011

உடன்கட்டையாய்





இல்லம் 
பாதுக்காக்க 
நிலையோடு 
கதவுகள் 


நடந்து பழக
நடைவண்டி 
உட்கார்ந்து 
எழுதி படிக்க 
மேஜை ,
நாற்காலி 


இரவுக்கு 
இன்பம் பெற 
கட்டியில் 
எல்லாம் 
மரத்தின் 
அடைக்கலம் 


மரத்தை மறந்தான் 
வேலை நிறுத்தமா 
மரத்தை தானே 
வெட்டி போட்டான் 


மழையை 
தள்ளி வைத்தான் 
சுத்தமான காற்றை 
தூக்கி எறிந்து
மறந்த நிலையில் 
நடை பிணமாய் 


மரணத்தில் மட்டும் 
எரியும் மரத்தோடு 
நன்றி மறந்த  உடலோடு 
உடன்கட்டையாய்
மனிதன்!



2 கருத்துகள்:

  1. ஆஹா அருமையா சொன்னிங்க அண்ணா ....இருக்கும் போதும் அழிக்கிறோம் ,இறக்கும் போதும் அழிக்கிறோம் ....superb

    பதிலளிநீக்கு
  2. நன்றி கலை உங்கள் கருத்துக்கு வருகைக்கு...

    பதிலளிநீக்கு