வாக்கு வங்கிக்கு
வரவு வைக்க
வாக்குறுதிகள்
வகுக்கப்பட்டு
பெருக்கப்பட
கூட்டப்பட்டது
கழிக்கப்பட்ட
நிலையில்
மிச்ச மீதி
வாக்குறுதிகள்
மறைக்கப்பட்டன
மின்சாரமில்லாத
இருட்டுக்குள்.
புதிய வரிகள்
மிரட்ட
போர்க்கொடி
தூக்காமல் இருக்க
முந்தைய அரசை
குறை சொன்னது...
தன் இயலாமை
மறைக்க
எங்கள் குறையை
போக்க வந்ததாய்
சொன்ன
இன்றைய அரசு...
முரசும்
அறுந்துப்போக
புது அவதாரம் எடுக்க
ஒப்பனை அறையில்
இன்னும்...
சூரியனோ
ஒளி மயங்கிய
நிலையில்
சுருட்டிக்கொள்ள
ஏமாற்றத்தை
போக்கவோ
இல்லை
புதிய ஏமாற்றத்தை
காணவோ
அடுத்த தேர்தலுக்கு
காத்திருக்கு
இளைய ஜனநாயகம்...
"மாறும் மாற்றமும் ஏமாற்றமாய் இந்திய ஜனநாயகம்"சரியா சொன்னிங்க அண்ணா இந்திய ஜனநாயகம் பற்றி ,,, ....:கவிதை அருமை .....
பதிலளிநீக்கு