16 டிச., 2011

காதல் வினை




உண்மைக்காதல்
நம் காதல் என
ஊரே சொன்னபோது
மனமகிழ்ந்தோம் .


எம்மதமும் ,
சம்மதம் என ,
சத்தமில்லாமல்
உனக்கு நானும்
எனக்கு நீ என்றும்
வகுக்கப்பட்ட 
வாழ்க்கைக்குள் 
சேர்ந்துக் கொண்டோம்.




மன்னராட்சி ஒழிக்கப்பட்டு
மக்கள் ஆட்சி செய்தோம் .
எதிர்க்கட்சியாய்
நம் பொற்றோர்கள்
இருந்தாலும்
பல கேள்விகளுக்கு
பதிலுரைத்து 
ஆட்சி புரிகிறோம் .


காதல் தான் நம்மை
சேர்த்தது உண்மைதான்.


ஆனா அதே காதல்
நம் மகளுக்கு
வந்தபோது மட்டும்
கோபம் கொண்டோம் .


கொண்ட காதலை
வெறுக்கிறோம் .
ஏனோ புரியவில்லை.
பதில் தெரியவில்லை .


நாமும் சராசரி
பெற்றோர்கள் என்பதை
உறுதி படுத்துகிறோமா.

இல்லை 
இன்றுதான் நம் ,
பெற்றோர்களின் மனம் 
படிக்கிறோமா...


இதுக்குதான்
தன வினை 
தன்னை சுடும்,என்று
சொன்னார்களோ ...


காதல் எனபது
இணைப்பதில்லை 
பிரிப்பது எனபது உண்மை.


காலத்தின் கட்டாயம் 
காதல் வந்தால் 
வாலிபனுக்கு 
ஆனந்தம் .
பெற்றோர்களுக்கோ 
மனக் கஷ்டம்.


ஓடிவந்த பின் அவர்களின் 
அவமானம் ஒன்று போதும் 
நம் வாழ்க்கை விளங்காமலே 
போகும்!


வேணுமா இந்த காதல்...
சொல்லுங்கள் 
கொஞ்சம் பெற்றோர்களாய் 
காதலர்களே மாறுங்கள்...
உண்மை அறிய !

2 கருத்துகள்:

  1. எல்லாப் பெற்றோர்களும் தன பிள்ளை நல்ல இருக்கத் தான் நினைப்பாங்க .... இப்போ இருக்குற காதலிக்கிற பிள்ளைகளும் கொஞ்சம் மாறனும் என்பது என் கருத்து ...கவிதை அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துக்கு நன்றி .உங்கள் மறுமொழிக்கு நன்றி .

    பதிலளிநீக்கு