14 டிச., 2011

சீய் மனித ஜாதி போல...



பல ஜாதி
பூக்கள் ஒன்றாய்
திரட்டப்பட்டன
மாலையாய்

மனிதனை 
மகிழ்விக்க...



மனித ஜாதி

ஒன்றாய்
கூட்டப்பட்டது 
பிரிவை உருவாக்கி 
ஜாதியை 
ஆதரிக்க 

மயக்கும் மணத்தை
ஜாதி பூக்கள் 
தந்து சிரித்தது 

பாதை மாற்றும் 
பேச்சுகள் மூலம் 
பாவியாய்
மனித ஜாதி 
அவதரித்தது 

வன்முறைக்கும் 
கொலைக்கும் 
உறுதுணையாய்...
ஜாதி நின்றது.


ஜாதி மலர்கள் 
கூவி விற்கப்பட்டன 
இறைவனுக்கும் 
மனிதனுக்கும் 


இங்கு ஜாதிகள் 
கூவி அழைக்கப்பட்டது 
அடுத்த ஜாதி 
மக்களை திட்ட
கொல்ல...


மிருகங்களும் 
பறவைகளும் 
சொல்லிக்கொள்கிறது 
தங்கள் இனத்துக்குள் 
சண்டை வரும்போது 
சீய் மனித
ஜாதி போல 
இருக்கதே என்று...

1 கருத்து: