அடுக்கி வைக்கப்பட்ட
சிமென்ட் கோபுரத்தின்
மூலையில்
எங்கள் மூளைக்கு
கிடைத்த பரிசாய்
புது வீடு...
நகரத்தின் மத்தியில்
மரங்கள் இல்லாத
நிலையில் வானத்தை
பார்க்க...
அப்பா வந்தார்
என்னடா இது
வீடா இது...
வசைப்பாடினார்
அவரியின் பூர்வீக
வீட்டை நினைத்த
வண்ணம்...
என்ன சொல்லுவது
அவரிடம்
இதுக்கே
நாங்கள்
பட்ட கஷ்டத்தை...
எங்களுக்கு சரிப்பா
உங்கள் விருப்படி
இருக்காது
சாரிப்பா
என்று பதிலோடு
நிற்க...
சொன்னார்
எல்லாம் இருக்க
நாங்கள் கட்டினோம்
வீட்டை...
நீங்கள் கட்டி
இனி வாங்கணும்
காற்று உட்பட...
உண்மை
உரைத்தாலும்
உறுதியாய்
உள்ளம்...
வாடகையை
இல்லாமல்...
இருந்ததை
தொலைத்து
அலுவலகத்தில்
லோன் எடுத்து...
நாங்கள்
வாங்கிய வீடாய்
இருப்பதால்
அமைதியாய்...
வீட்டியில்
மட்டும்
அழகுக்கு செடிகளை
வளர்க்க
திட்டத்தோடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக