9 நவ., 2011

பயண முடிவுக்கு...















நாளைய தலைமுறையின் 
வாழ்க்கைக்காக 


எங்கள் வாழ்க்கையை 
தொலைக்கவே 
பாலைவனம் வந்தோம் 


இன்பத்தை தொலைத்து 
குடும்பத்தை மறந்து 
பாசத்தை இழந்து 
வாங்கப்பட்டன 
பணம்!



நாளைய தேவைக்கு 
இன்று சேமிக்க 
விற்கப்பட்டன 
இளமை...


மரண செய்தியை 
கேட்டு மரமாய்...
நடமாடும் கல்லாய்


உறவுகளின் திருமணமா 
வீடியோவில்...


செய்திகள் பரிமாற்றம் 
தொலைபேசியில்...


தண்ணீரை சேமிக்கும் 
ஒட்டகத்தை போல 


விடுமுறைக்காக 
கனவு காண்பதிலும் 


விடுமுறைக்காக 
காத்திருப்பதில் தான் 
காலமே ஓட்டம் 




திரும்பி பார்த்தால் 
முடி நரை  சொல்லும் 


இன்னும் எங்கள் முறை 
வரவில்லை 
ஊரில் வாழ...


காத்திருக்கிறோம் 
முதுமையோடு 


பயண 
முடிவுக்கு...





உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. பாலைவன வாழ்க்கை தான்.பலர் துன்பப் படுகிறார்கள் ஆண்டவன் தான் அருள வேண்டும்.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  2. தியாகத்தை காட்டவே தாயகத்தை விட்டு வந்தோம் நன்றி ,உங்கள் கருத்துக்கும் வருகைக்கும்.

    பதிலளிநீக்கு