10 நவ., 2011

தீர்மானிக்கும் ஆயுதம்.



நினைவு மழையில் 
வெள்ளமானது மனசு.

நேற்றைய பொழுதுகள் 
சரித்திரத்தை பார்க்கிறது

தரித்திரம் என்றது கூட 
இன்று சரித்திரம் 

வெற்றி மனிதனை 
பழைய கிசு கிசகூட 

நிரப்பப்பட்ட மதுவாய்
மாறுவது உண்மை

தோல்விகள் எல்லாம் 
சாதனைகளை கூட 

சாக்கடையில் கரைந்தே 
போகிவிடும்...

இங்கு நிர்ணிப்பது 
வெற்றியே...

வெறியோடு வெற்றிக்கு 
வெள்ளோட்டம் 

கிடைத்துவிட்டால்  போதும் 
எல்லாமே தேரோட்டம் 

இதனால் சகலமானவர்களுக்கும் 
சொல்வது என்னவென்றால் 

வல்லரசுகளின் கூட்டு பலம் 
வெற்றியை சொல்லும்

சதாம் ,கடாபி வீழ்ச்சி 
சரித்திரமும் மறைக்கும்...

இன்றைய அரசியலும் 
வெற்றியின் நிலையை சொல்லும்   

கடாபியின்  தோல்வி அவரின் 
சாதனையை கொல்லும்...

வெற்றியே மனிதனை 
தீர்மானிக்கும் ஆயுதம்.

வெல்க வெற்றியை 
கொல்க தோல்வியை 
==============================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. அருமையாக உள்ளது...

    நீங்கள் போட்டுள்ள படம் எமது நாட்டின் முன்னணி வானொலி ஒன்றின் லோகோவகும்.

    அன்புச் சகோதரன்...
    ம.தி.சுதா
    இலங்கைப் பதிவர்களின் முதல் குறும்படம் - ஒரு பழைய முயற்சி

    பதிலளிநீக்கு
  2. நன்றி உறவே .இது கூகிள் தேடலில் கிடைத்தது.கவிதைக்கு சரியா இருக்கவே எடுத்து போட்டேன்.உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி உறவே.

    பதிலளிநீக்கு