இருந்த இதயங்கள்
இவனின் பிணத்தை
பார்த்து
உயிர்பிக்க...
வெட்டிய உறவுகள்
ஒட்டிக்கொண்டன
சாவு வீட்டில்...
பங்காளி சண்டைகள்
அழுகையோடு
கரைக்கப்பட்டன
திட்டி தீர்த்த
தூரத்து உறவுகளும்
ஊர்காரர்களும்
கண்ணீர் வடித்து
மாலைகளோடு
மனம் மாற்றம்...
பெயரோடு வாழும்போது
இவன்
யார் என்றே
புரியவில்லை
இருக்கும் வரை
இவன் மதிப்பு
தெரியவில்லை
மறைந்த பின்னே
மறக்கும் மனங்கள்
இங்கே...
பிணமாய்
போனபின்னே
மரியாதைக்கு
குறைவில்லை...
unmaiyae annaa ,,,
பதிலளிநீக்குநன்றி தோழரே...
பதிலளிநீக்கு