19 நவ., 2011

ஓட்டுக்கு பணம்....


ஓட்டுக்கு பணம் 
தர ஒகே என்றேன்

போட்டேன் ஒட்டு
நான் புத்திசாலி என்று

தகுதியே இல்லாமல்
பணம் கொடுத்து
வெற்றி பெற்றவனை

எனது தேவைக்கு 
தேடி சென்றால் 
பார்க்கவே பல நாள் 
பார்த்து கேட்டால் 
நீட்டனும் காந்தி தாள்

நேற்று 
நான் நினைத்தேன் 
புத்திசாலியாய்...

இன்று
காந்தியை தந்த பின்  
உணருகிறேன்
நான் தான் ஏமாளியாய்

குற்றம் எனக்குள் 
கூனி குறுகி போனேன் 

அடுத்த தேர்தலில் 
ஆகவேண்டும்
அறிவாளியாய்...

காத்திருக்கிறேன் 
ஓட்டுக்கு வாங்கிய 
பணத்தை வட்டியோடு 
கொடுத்த பாவியாய்...

=============================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக