19 நவ., 2011

உறுதிமொழி ...







தலைவர் சொன்னத்தால் ,
நானும் குரல் கொடுத்தேன்.

தாய்  மொழிதவிர வேறு
எதுவும் படிக்கமாட்டேன்

மறுமொழி குரல் கொடுத்து
உறுதிமொழி எடுத்தேன்.

அந்நியமொழி ஆங்கிலம்
இந்திய மொழி இந்திஇல்லை
என உயர்த்திப் பிடித்தேன்.

தலைவரின் தலைமுறை
படித்ததோ ஆங்கிலத்துறை!

இதுக்கு வரைமுறை இல்லை
அவர்கள் கற்றால் ஒன்றுமில்லை.

பயணம் வரும் வரை
நானும் அறியவில்லை...

இந்தி தெரியவில்லை
மொழிகள் புரியவில்லை 


பேச முடியவில்லை
வேற வழியுமில்லை

இப்போதுதான் புரிந்தது
அரசியலுக்காக பேசுவது
மட்டும் வாழ்க்கை இல்லை.

தமிழ்!
இது நம் மொழிதான்.
எனக்கும்
மாற்றுக்கருத்து இல்லை.

மற்ற மொழிகள் ,
கற்பதும் தவறில்லை.

இதை உணர்ந்து கற்றால்
உனது உயர்வுக்கு குறைவில்லை



.==================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. Alhamdulillah allah ungalukku nal arul purivanaga...entha mathiri kavithai namma nattuku kandippa thevai sagothara....

    பதிலளிநீக்கு
  2. நன்றி இளவலே. உங்களுக்கும் இறைவன் அருள் புரிவானாக...உங்கள் கருத்தும் வருகைக்கும் நன்றி .

    பதிலளிநீக்கு