9 நவ., 2011

பட்டி மன்றம் தொடரும்.





தீபாவளி கடந்துவிட்டது,அடுத்து பொங்கல் வரும் நேரம்.
இன்னும் திரைப்படத்தின் பார்வைகள்,ஓய்ந்தப் பாடியில்லை.

வேலாயுதம் .ஏழாம்அறிவு .எது முதலிடம் என்று இணையத்தில் 
மக்கள் இதயத்தில் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கு.

சினிமா சினிமா இது தானா வாழ்க்கை.சினிமா மீது 
நமக்குள் உள்ள தாக்கம் இன்னும் குறையவில்லை.

இருட்டறை வாழ்க்கைக்குள் நம்மை அடக்கிவிட்டது.
இன்னும் ரசிகர்களாய்,தொண்டர்களாய் தொடர்கிறது.

பிறந்த நாளுக்கு மட்டும் கொடுத்து உதவும் இவர்கள் தான் 
மறைந்தாலும்  ,இருந்தாலும் கதாநாயகர்கள்.

24 மணிநேரமும் உதவுவதே வாழக்கையாய் கொண்ட 
உதவும் கரங்கள் வித்தியாசாகர் ,மறைந்த அன்னை திரசா

இவர்கள் எல்லாம் கதாநாயகர்களாய் மனதில் கூட 
எண்ணுவதே இல்லை.இவர்கள் பற்றி இணையத்திலும் 

வருவதில்லை.சினமா சினமா இது தானே இன்றைய உலகமாய் 
உலவுகிறது...இன்னும் தொடருகிறது....

சினிமா ஆயுதம்.
சிரிக்க சிலிர்க்க 
வைக்கும் மாஜிக் ஷோ.

தமிழ் நாட்டை 
ஆழுகின்ற சக்தி 
இந்த சினிமா.

பகல் கனவோடு 
ஒரு ஊர்வலம் 
அதிர்ஷ்டமிருந்தால் 
ஆட்சி அதிகாரம்.

கவர்ச்சிக்கும்,காதலுக்கும்
காமத்தோடு நகர்வலம்.

கோடி பெற்று வாழ்க்கை 
தெருக்கோடி 
அபிஷேகமிட்டு கொடி கட்டி 
பாடி மகிழும் 
 ரசிகர்கள் கமிட்டி 

மசாலா ஹீரோக்களின் 
மாஜிக் ஷோ.
இன்னும் தொடருகிறது.
ஏமாற்று வித்தை 
நடைபெறுகிறது.

வேலாயுதம் .ஏழாம்அறிவு .எது முதலிடம் அடுத்தப்படம் 
வரும் வரை பட்டி மன்றம் தொடரும்.

பார்வைகள்.தொடரும்.
===========================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. உண்மை அண்ணா... தொலைகாட்சிக்குள் குடி இருக்கும் குடும்பங்கள் தான் அண்ணா பெருகிக் கொண்டே போகின்றன அண்ணா .....அண்ணா என்று தான் நாம் விழித்தேளுவோம் என்றுத் தெரியவில்லை ,,,,,,,,,,,

    பதிலளிநீக்கு
  2. உங்கள் விரிவான கருத்துக்கு நன்றி தங்கையே .

    பதிலளிநீக்கு