8 நவ., 2011

சாம்பிராணி...

நெருப்புக்குள்  தூவப்பட்டன 
சாம்பிராணி
பக்தியோடு நகர்வலம்.

புகைக்கும் ஒரு வாசம் 
சாம்பிராணி சொன்னது.

வீட்டியில் உள்ள 
நாற்றத்தை போக்க 
போர்க்களம்...
வென்றது சாம்பிராணி.

சாம்பிராணிக் கட்டிகள்
பென்ஜைய்ன் 

மரப் பிசினிலிருந்து
பிறக்க 
ஊர்முழுக்க ஊர்வலம்.

புகைக்க புகைக்க 
பெண்ணின் கூந்தல் 
மணக்கும்...

மணக்க மணக்க 
மனதை இழுக்கும்...

எல்லாம் சாம்பிராணி
சூத்திரம்....

மடத்துக்கும் ,மனத்துக்கும் 
சாம்பிராணி தூவார்கள்...

மட சாம்பிராணி என 
முட்டாளை சொல்லுவார்கள்...

அட பாவிகளா 
புகைச்சலுக்கே புகைச்சல்...

தரவே இப்படி எல்லாம் 
கூர்வார்கள்...

சாம்பிராணி மனதையும் 
கூந்தலையும் நறுமணமாய் மாற்றும்..

சாம்பிராணி புகைத்தே 
நன்மை ஈர்க்கும்.
===================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

3 கருத்துகள்:

 1. நினைக்காத ஒரு தலைப்பில் எழுதியுள்ளீர்கள் சகோதரா. வாழ்த்துகள். பணி தொடரட்டும்.
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. உங்கள் வாழ்த்துக்களில் மனம் மகிழ்ந்தது சகோதரி.வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி .

  பதிலளிநீக்கு
 3. annavin kai pattal kavithaigal anaiththum ellam manakkum ....puthu vasanthamum kodukkum ....

  superb annaa

  பதிலளிநீக்கு