4 நவ., 2011

பூமிக்குள்...


ஆற்று நீரும் 
கடல் நீரும் 
சாக்கடை நீரும் 
வஞ்சனைல்லாமல்...

ஆவியாகிப்போகின 
சூரியன் செய்த சதியால் 
பூமியிலுள்ள 
தண்ணீர் 

மேகங்களிடையில் 
கருத்து வேறுபாடு 

அடித்துக்கொள்ள ஆயத்தம் 
ஆவியாய் வந்த நீரால்...


கோபத்தை 
அதிகப்படுத்தியது 
காற்று 

இடியும் மின்னலும்
நேட்டோபடைகள்  போல் 
இனைந்துக்கொள்ள 

மேகங்கள் 
மோதிக்கொண்டன...

மோதிய மோதலில் 
மழை வெள்ளமாய் 
பெருக்கெடுத்தது 
பூமிக்குள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக