4 நவ., 2011

பூர்வீக வீடு.மனதுக்குள் இன்னும்
அழிந்து போகாமல்
பாசமாய் பசுமையாய்
வாழ்ந்த காலத்தை
காட்சியாய் ஓடும்
பூர்வீக வீடு.


இதோ இந்த
புதுத் தெருவில் தானே
முன்னோர்களின்
முகவரி இருந்தது.


உறவுகளும்
சொந்தங்களும்,
கூடிய கூடு.


பாசப் பறவைகள்
இறந்துபோனதால்
எல்லாம் மாறித்தானே
போனது.


வறுமை வலைவிரிக்க
வீடும் கை மாற
இன்று நிறமாறி
குலமாறிதனே இருக்கு.


ஓட்டு வீடு.
பெரிய திண்ணையும்
திண்ணையின்
இடதுப்பக்கம்
சாய்வாய் அமர
சிமென்ட் சிமாசனம்.


இங்கு தானே
நான் உட்கர்ந்து இருந்தேன்.
உறவுகளுடன்,
நண்பர்களுடன் பேசி சிரித்தேன்.


தேக்கு மர தூண்கள்
வீட்டை தாங்கி நிற்கும்
பார்க்கும் போதே ஈர்க்கும்.


வாசக்கதவுகள் .
இரும்புக்கோட்டையாய்
வீட்டைக்கக்காக்கும்.
இதை நான் பூட்டி
பார்த்ததில்லை.


மிதிவண்டியை
இருசக்கர
வாகனத்தை நிற்க
இடம்.


அடுத்து ஒரு கதவு,
பாதுக்காப்புக்கு.


அடுத்து பெரிய
வாசல் ,
இன்று இதுக்குள்ள
வீடு கட்டும் நிலை.


மழைக்காலத்தில் 
காகிதக் கப்பல் 
இங்கு தானே விட்டேன்.

வாசல் ஓரத்தில் 
படுத்துவிட்டால் போதும் 
காற்றை மின்சாரமூலம் 
கடன் வாங்க வேண்டாம்.

தென்றல் வந்து 
கொஞ்சும்,
தூக்கம் கண்ணுக்குள் வந்து 
கெஞ்சும்.


இதை ஒட்டி கூடம் ,
விருந்து என்றால்
ஒரு தடவை
முந்நூறு பேர்
அமர்ந்து சாப்பிடலாமே.


இரண்டு அறைகள்,
கூடத்தை ஒட்டி.


அடுத்து சாமன்கள்
வைக்க அறை என


ஒவ்வொரு அறைகளும்
இன்று வாடகை வீடாய்
இருப்பதை கூறலாம்.


சமையல் செய்கிற போது
காற்றுக்கு பஞ்சமில்லை.
சமையலறை இன்று
போல் குறிகிய இடமாயில்லை.


பெரிய நீர் தொட்டி
ஒரு தடவை நிரப்பிவிட்டால்
தண்ணீருக்கு 
பஞ்சம் வந்ததேயில்லை.


இன்னும் சொல்லலாம்,
எங்கள் பூர்வீக வீட்டை


நினைக்கும் போதும்
சொல்லும் போதும்
கண்ணும் கலங்கும்
எனக்கு...


எல்லாம் இன்னும்
மனதுக்குள்...
எங்கள் வீடோ
இன்று மண்ணுக்குள்.


இருந்தாலும்
மனதில் இன்னும் படமாய்
இருக்க
நினைவுகளோடு 
இன்றும் 
படமாய் ஓடிக்கொண்டு தான்
இருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக