14 நவ., 2011

எதிர்பார்ப்புக்கள்





நல்ல காலம் பொறக்குது 
குடுகுடுப்பின் 
வாழ்த்துப்பாட்டு.


எதிர்காலத்தை 
சொல்லும் அதிசியம் 
கிளி சோதிடம்.


நாளைய வாழ்வுக்கு 
இன்றைய நிமிடத்தை 
தொலைத்த அப்பாக்கள்


கனவுலக   நாயகர்களாய் 
குட்டிச்   சுவற்றில் 
இளைய தலைமுறைகள் 


வாழ்த்துச்  சொல்லும் 
சுவர் ஓட்டிகள் 
தலைவனுக்கு...


கூட்டமில்லாத 
பொதுக்கூட்டம் 


இலவசத்தை சொல்லி 
தன் வசம் அழைக்கும்
அரசியல்வாதிகள்...


தேவைக்கு தோள் 
தந்து வேதனையை 
வாங்கும் உலகத்தில் 



கவலைகள் இல்லாத 
தேவைகளை  தேடாத 
மனிதன் எங்கே 

தேடுகிறேன்...


தேடலின் தான் 
வாழ்க்கை தொலைத்தேன் 
இருந்தும் இன்னும்...


ஏணியாய் 
எதிர்பார்ப்புக்கள்
ஏமாற்றும் நிலையாய்
========================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

3 கருத்துகள்:

  1. பெயரில்லா14 நவ., 2011, 5:32:00 AM

    அருமையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  2. அனைத்து வரிகளும் உண்மை அண்ணா .... அண்ணா உங்கை கவிதைகள் அனைத்துமே அருமை அண்ணா .... எல்லாக் கவிதைகளிலுமே உண்மை உணருகிறேன் அண்ணா ..நன்றி அண்ணா நல்ல கவிதைகள் கொடுப்பதற்கு ....

    பதிலளிநீக்கு
  3. உங்கள் இருவரின் கருத்துக்கும ,வருகைக்கும் நன்றி ,நன்றி...!உங்கள் ஊக்கமான கருத்துக்கள் என்னை இன்னும் எழுத சொல்லும் ...சொல்லட்டும்.

    பதிலளிநீக்கு