கடவுச் சீட்டு
எடுத்தது முதல்
ஏதோ ஒருவகையில்
மனதில் ஒரு....
களவாடப்பட்ட
நாட்களை
மகிழ்ச்சியை
நிகழ்வுகளை
நித்திரைகளை
குழித்தோண்டி புதைத்து
என்னை அடிமைப் படுத்த
வந்த புதிய வெள்ளைக்காரன்...
பெற்றோர்களின் பாசத்தை,
மனைவியின் நேசத்தை
பிள்ளைகளின் சேஷ்டைகளை
காணமுடியாமல்
பறித்துக் கொண்டவன்
என்னை நடை பிணமாய்
நடமாடும் வங்கியாய்
நவரசத்தில்
சோகத்தை மட்டும்
தந்து மற்றவைகளை
மறைத்துக்கொண்ட
மோசக்காரன்...
ஆசைகளை தந்து
அசைவுகளை அழித்து
ஆடவிட்டு கூடைக்குள்
அடக்கிவிடும்
ஆட்டிப்படைக்கும்
பாம்பாட்டிக்காரன்...
இவனே பலம்
இவனே பலவீனம்.
========================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
அருமை சார். சொந்த ஊரில் கூடு அறியாமல் பறந்தது வெளியூருக்கு பறவை.
பதிலளிநீக்குஉங்கள கருத்து உண்மையே .வீட்டை விட்டு பறந்தபறவைகள் தான் .நன்றி உங்கள் வருகைக்கு கருத்துக்கு...
பதிலளிநீக்குஉண்மை தான் அண்ணா...
பதிலளிநீக்குஎன்னை நடை பிணமாய் நடமாடும் வங்கியாய்
நவரசத்தில் சோகத்தை மட்டும் தந்து மற்றவைகளை மறைத்துக்கொண்ட மோசக்காரன்...இவனே பலம்
இவனே பலவீனம்.
அண்ணா அருமை ...வீட்டை வெட்டு வெளியே செல்லக் கூடத் தயங்கும் என்னைப் போன்றோர்களுக்கு தன்னம்பிக்கை ,மன தைரியம் ,கிடைத்துள்ளது அண்ணா...