7 நவ., 2011

ஓரினம்!ஊழலை எதிர்த்து ஊர்வலம் 
உண்மை சொன்னது 
கர்நாடகம்.

உள்ளம் குத்திக்காட்டவே 
பாதை திருப்பட்டது 
நகர்வலம்.

ஊழலுக்கு உண்ணாவிரதம் 
இருந்த பின் தான் அறிந்தோம் 
இங்கும் அடைக்கலம்.

மக்களின் மனங்கள் 
மறக்கும் நிலை அறிந்தே 
ஊழல் ரதம் தொடரும்...

காட்சிகள் சொல்லும் 
கட்சிகள் பேசும் 
இருந்தும் இன்னும்....

கைக்கூப்பி நிற்ப்பதில்
கை நீட்டி வாங்குவதில் 
எல்லோரும் ஓரினம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்:

  1. ellarum athil mattum oru inam ....superb annaa ..... ulal illa oor namma ooril engum illai anna..

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்து உண்மையே சகோ.மாற்றம் வரும் ,நம்புவோம்.நன்றி .

    பதிலளிநீக்கு