வானம் பார்த்த
பூமி...
மழையே
கையேந்தி
நிற்கிறோம்
இருக்கும் கொஞ்சம்
நிலத்தில்
நீர் பாசனம்
செய்ய...
உன் வருகை
மாறிப்போனதால்
எங்கள் நிலைமையும்
மாறித்தான் போனது
விளை நிலங்களில்
புதிய பாசனமாய்
வீடுகள்
அடுக்கு மாடிகள் என
பதியம் போட்ட
நிலையில்...
இருப்பதும்
மாறாமல் இருக்க...
இருப்பதில் விதைக்க
எங்களை ஏமாற்றாமல்
அமைதியாய் வா...
எங்களை ஏமாற்றாமல் அமைதியாய் வா.. அருமை அண்ணா ......ரொம்ப அழகாய் சொல்லி இருக்கீங்க அண்ணா
பதிலளிநீக்குவருகைக்கும் ,கருத்துக்கும் நன்றி .
பதிலளிநீக்கு