அம்மா!
ஆயிரம் சொந்தங்கள்
வந்தாலும்
உனக்கு நிகர்
யார் அம்மா!
ஒவ்வொரு
முறையும்
நான் உன்னை
பார்க்கும் போதும்
பாசத்தோடு
அணைக்கும்
நிகழ்வுக்கு
ஈடு ஏதம்மா .
நான் வருகிறேன்
என்றாலே
சிறு குழந்தையாய்
நீ மாறுவாய்...
முடியாத நிலையிலும்
முண்டியடித்து
நீ சமைப்பாய்...
வேண்டாம்
என்றாலும்
கேட்கவா போறாய்
வகைக்கு ஒன்னு
வேலைக்கு ஒன்னு
என சமைத்து தான்
முடிப்பாய்
போதும் போதும்
என சொன்னாலும்
இன்னும் கொஞ்சம்
என்று
கொஞ்சியே
வயிறு முட்ட
உண்ண வைப்பாய்..
நான் வளர்ந்து
போனாலும்
இன்னும் குழந்தையாய்
எண்ணி ஊட்டி தான்
விடுவாய்
உன்னோடு நான்
இருந்த ஒவ்வொரு
வினாடிகளும்
குழந்தையாய் தான்
மாறிப்போவேன்...
நேற்று
உன்னை விட்டு
வந்த பின்
உன்னோடு
இருந்த நாட்களை
நினைத்தப்படி...
அடுத்த விடுமுறை
வரைக்கும்
உன் நினைவுகள்
சுமந்தபடி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக