19 நவ., 2011

ஏழைகள் கூவி...


ஏழைகள் கூவி 
விடியாது 
விலைவாசி 
இரங்காது


ஐந்துக்கும் 
பத்துக்கும் 
திண்டாட்டம் 


இருப்பதால் 
இதில் எங்கே 
எங்கள் எதிர் 
போராட்டம் 


பார்த்து பார்த்து 
மறத்துப்  போனது 
பசி மட்டுமா 
விலை வாசியும்...


சுக வாசி 
போடும் 
விலைவாசி 




படிப்பறிவு 
இல்லாத ஏழைக்கு 
வாசிக்கவும் 
யோசிக்கவும் 
நேரமில்லை...



அடுத்த வேலை 
உணவை தேடிய 
வாழ்க்கையில்...



========================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: