20 நவ., 2011

விடியலை நோக்கி...





இனியவளே!
போர் முனைலிருந்து
என் உணர்வுகளை பகிர்ந்து
கொள்ள இதோ என்
கடைசிக் கடிதம் இது!


எந்த நிமிடமும்
என் உயிர் என்னை விட்டு
போகலாம்
அதற்கு  முன்
உண்டோடு பேச ஆசை...

நம் மண்ணிற்காக 
சிந்த போகும் ரத்தம்
நாளைய நம் இனத்துக்கு
நாம் விதைத்து வைத்திருக்கும்
விடுதலைக்கு உரம்!

நம் மண்ணில் எப்படி எல்லாம்
இருந்தோம் 
நினைத்து பார்த்தால்
இந்த நிமிடம் கூட பசுமையாய்
தெரிகிறது என் கண்முன்னே!

மாமன் மச்சான்
உறவுகளின்
மகிழ்ச்சியின் ஆர்பரிப்பு
கேளிக்கைகள்
எத்தனை இன்பங்கள்.
அப்பப்பா அந்த நாட்கள்...

மீண்டும் எனக்கு 
கிடைக்க போவதில்லை.
நம் தலைமுறைக்கு 
கிடைத்தாலே போதும்!

அது தான் நான் வாழ்ந்ததுக்கும்,
இப்போ உயிரை விடுவதற்கும் ,
அர்த்தமாக இருக்கும்!

நான் எப்படியும் 
இறந்துபோகதான்
போகிறேன்...

நான் இறக்கும் முன்
எத்தனை எதிரிகளின் உயிர்களை
என் மண்ணுக்கு
பரிசாக
தரபோகிறேன் என்பது தான்
இப்போதிய கனவு.

எனக்காக 
உதவி செய் நீ.
என் சடலம் முன் நின்று
என் கடைசி போராட்டத்தில்
எத்தனை எதிர்களை கொன்று
நான் இறந்தேன் என
சத்தம் போட்டு சொல்!

என் சடலம் சந்தோசம் படும்.
சென்றுவருகிறேன்,
வென்று வருகிறேன்
புதிய படைப்பாக தோழியே!

வீழ்ந்தது நான் தான்.
வாழ போவது
நம் இனம் தான் .
எதிரிகளை நோக்கி போகிறேன்.
விடியலை பார்க்க வேண்டுகிறேன்.


=============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக