27 நவ., 2011

ஈழத்தில் சுவாசிக்கும்.


ஈழம்!
இறந்தவர்களின் கனவு
இரத்தத்தை சிந்தி 
உறவுகளின்
உயிர்களை
இழந்தவர்களின்,
உணர்வு...

தோல்வியே 
கருவாகி
களம் காண 
வழியானது
இனத்தைக் 
காக்கும்
கவசமானது.

வரும் சுதந்திரம்
கிடைக்கும் அதிகாரம்
என்ற எண்ணத்தில் 
மண்ணுக்குள்
புதைந்த விதைகள்
மரமாகி பூக்கும் 
ஈழம் மலரும்

நகைக்கும் கூட்டமே
வரலாறு பாருங்கள்!
சுதந்திரப் போராட்டம்
எல்லாம் உடனே 
கிடைக்கவில்லை
கிடைத்ததில்லை!

ஆதிக்கவெறியர்கள்
அழிந்தததை 
இந்திய
வரலாறு சொல்லும்,
1947 ஆண்டை பார்த்தால்
விடை தெரியும்
உண்மை சொல்லும்
நம்பிக்கைக்கொள்ளும்...

நம்பிக்கையே வாழ்க்கை.
நாளை மலரும் 
ஈழம் என்பதை,
நாளும் எண்ணும் 
மனதை
மறக்கமாட்டோம்

ஈழத்தில் சுதந்திர
தமிழ்க் காற்றில் 
எங்கள் சுவாசம்
சுவாசிக்காமல் 
விடமாட்டோம்!

உறுதியான உயில்
உயிராகி
உரமாகி போனது.
உயிர் போனாலும் ...

உறவுக்கு
ஈழம் கிடைக்கும்
கிடைக்க 
புதுத்  தலைமை பிறக்கும்!

வலிகள் போக்க,
விடியலாய் வழிகள்
கிடைக்கும் 
எங்கள் இல்லங்கள் 
முளைக்க
ஈழத்தில் சுவாசிக்கும்.

2 கருத்துகள்:

  1. நம்பிக்கை கொள்வோம் அண்ணா ...நாளையாவது விடியுமா ,,,,,,கவிதை அருமை அண்ணா

    பதிலளிநீக்கு
  2. விடிய இறைவன் அருள் புரியட்டும் புதிய தலைமை கிடைக்கட்டும்,,,நன்றி தங்கையே

    பதிலளிநீக்கு