27 நவ., 2011

வாழ்கையை தேடி...

வாலிபத்தில் 
வறுமை
இணைந்துக்கொள்ள 
வாலிபத்தை 
விற்றதை 
அறியாமல் 


கனவுகளோடு 
எதிர்பார்த்த 
வாழ்க்கையை 
வாழ்ந்து பார்க்க 



களமும் 
காலமும் 
கடல் கடந்து 
போகச் சொல்லவே

உள்ளத்தில் 
ஆசைகளை 
பூட்டிவிட்டு 
பயணம் வந்தவர்கள் 
கோடி..

வாழக்கையை 
வாழமுடியாமலும்,
கைப் பிடித்தவளை 
மறக்க முடியாமலும்


சடலமாய் 
சகலமும் 
இழந்து 

இரவுகள் 
இன்னல்களாய் இருக்க
இமைகளும்
மூட மறுக்க 

இரவோ தூக்கத்தை 
துக்கமாய் தந்து போகும்.
முப்பது நாள் 
விடுமுறைக்கு 

முந்நூறு

நாட்களுடன் 
போராட்டம்.


கனவுக்குள் 
அடைக்கப்பட்ட 
வாழ்கையாய்
வாழும் 
மனிதர்கள் கோடி...


வாலிபத்தை 
தொலைத்த 
இதயங்கள் இங்கே...



வாழ்கையை தேடி
காரணங்கள் 
சொல்லி இன்றும்...

2 கருத்துகள்:

  1. ரொம்ப உணர்vaa எழுதி போட்டுடிங்க அண்ணா....கவிதை முடிக்கும் போது இதயம் கொஞ்சம் கனத்துருச்சி அண்ணா ,,, நன்றிகள் அண்ணா நல்ல கவிதை க்கு

    பதிலளிநீக்கு
  2. உங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி கலை .தினமும் வந்து படித்து கருத்து சொல்லும் உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு