ஒப்பனை அறைக்குள்
புது அவதாரமாய்
கவிதைகள்.
மரபுகளும்
கொஞ்சம் தள்ளி
வைக்கப்பட்டு
புதுபொலிவோடு
புதுக்கவிதை
ஊர்வலம்.
அவசர உலகத்தில்
டெஸ்ட் டிப்
குழந்தையாய்
கருவின் பிரசவம்.
எளிய நடைகளுடன்
எள்ளிய நடைகளின்
சமூகப்பார்வை...
இணையத்தில்
இதயங்களை வெல்ல
தமிழர்களின்
போராட்டம்...
இவர்களில் நானும்
ஒருவன்....
உங்களுடன்!
=============================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக