8 நவ., 2011

ஊனத்தின் பிரதிநிதிகள்.ஊனம் கொண்ட வாழ்வில் 
அன்பை விதைக்க 
தம்பதிகள் ஆனவர்கள்.

காதல் சொல்லும் அழகை
அடித்துப்போட்டு,
அணைத்துக்கொள்ள 
நேசத்தை நாடிய 
தேசத்து மானிடம்.

இவனுக்கு கையில்லை 
அவளுக்கு காலில்லை 
இவர்களுக்கு கவலையில்லை

இனிய இல்லறம் போதும் 
இன்பமாய் வாழ...
மனித நேயம் போதும் 
மகிழ்ச்சியோடு வாழ...

ஊனமில்லா  வாழ்வில் 
உயர்ந்த முகவரிகள்.

எல்லாமிருந்தும் நாம் 
ஊனத்தின் பிரதிநிதிகள்.
================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: