5 நவ., 2011

தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.


கடமைகள் அறிய
தீமைகள் நீங்க
மனிதனின்
மனதை அறிய

இறைவன் 
வைத்த தேர்வு

தியாகத் திருநாள்.

கண்ட கனவை,
நினைவாக்க 
துணிந்தது உள்ளம்!

இறைவன் சொன்னால்,
இனிதே செய்வேன் 
என்ற எண்ணம்

தடைப்போட வந்த 
சைத்தானையும்...
கல் எறிந்து
விரட்டிய தைரியம்.
எடுத்த கத்திக் கூட 
அறுக்க மறுக்க ...

கோவத்தில் ஏறிய
கல்லும் உடைந்தது,
கத்தின் கூறுமை புரிந்தது..

இடையிடையே 
தடைகள் வந்தாலும்
தியாகத்தை மாற்ற 
சைத்தான் முயற்சித்தாலும்

முடியாமல் போனது
நபி இப்ராஹீம் உள்ளம் 
துணிந்தே நின்றது.

உள்ளத்தின் நேர்மையை 
அறிந்த இறைவன்
நபி இப்ராஹீமை  பாராட்டினான்!

அவர்கள் நினைவை புகழ
நினைவுக்கொள்ள 
ஹஜ்ஜை கடமையாக்கினான்.

உலகத்தில் உள்ள மூமின்கள்
முகம் பார்க்க வைத்தான்.

காபாவில் மக்காமுல்
இப்ராஹீம் இடத்தில் 
தொழுதுக்கொள்ள 
வேண்டினான்.

அச்சம் தீர்க்கும் 
புனித ஜம்ஜம் நீரை 
பாலைவனத்தில் 
வழங்கி...

இன்றும் வற்றாத ஊற்றாய் 
உருவெடுக்க 
நபி இப்ராஹீமை 
தேர்ந்தெடுத்தான்.


அரஃபாவில் கேட்கிற 
துவாக்களை...
ஏற்பதாக சொன்னான்.

துல்ஹஜ் பிறை ஒன்பதில்
வாணவர்களை அழைத்து,
அரஃபா மைதானத்தை காட்டி
பெருமை படுகிறான்!

பல பெருமைகளை 
உள்ளடக்கிய திருநாள் 
இந்த தியாகத் திருநாள்.

உறவுக்கு கைக்கொடுத்து
மாற்றுக்கருத்துக்கு வழிவிட்டு

மனித நேயத்தோடு
கசப்புகளை மறந்து இருப்போம்
ஒன்றாய் இணைந்து வாழ்வோம்.

இருக்கும் வரை 
இறக்கும் வரை 
இறைவன் புகழை
இனிதே சொல்லி வாழ்வோம்.

வாழ்த்துக்கள் சொல்லி
உறவுகளை,நண்பர்களை,
சகோதரனை அணைப்போம்
அரவணைப்போம்!

உறவுகளுக்கு தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள் .

5 கருத்துகள்:

  1. தியாக திருநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. கவிதநடை அருமை,

    ஈத் முபாரக்.

    வஸ்ஸலாம்..

    பதிலளிநீக்கு
  3. உங்கள் கருத்துக்கு நன்றி தோழரே.
    உங்களுக்கும் எனது
    தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
    உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு
  4. Mohamed G உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி தோழரே.
    உங்களுக்கும் எனது
    தியாகத் திருநாள் நல் வாழ்த்துக்கள்.
    உரித்தாகட்டும்.

    பதிலளிநீக்கு