12 நவ., 2011

புதிய தலைமுறையை...

மனித நேய  முகம் பார்த்து 
சாதி மதங்களை தொலைத்து 


இரு கைகளை இணைத்து 
சத்தம் வர தட்டுவோம்.

நல்ல மனங்கள் இருக்கையில்
பல மதங்களின் உள்ளத்தைக் 

கண்டு அதைக் கொண்டு
இணைந்தால் மானுடம்

துணிவோம் இன்றே,
இணைவோம் இனிதே

கொள்வோம் போலி 
மதசார்மையை

வெல்வோம் 
சாதி மத மிருகங்களை.

எல்லோரும் ஒன்று 
என்பதே நன்று என்று....

அணைப்போம் அனைவரையும்
அரவணைப்போம் மனிதத்தை 

உருவாக்குவோம் 
புதிய  தலைமுறையை.


=================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

3 கருத்துகள்:

  1. உருவாக்குவோம் புதிய தலைமுறையை. நிச்சியமாய் ..வரிகள் சமுகத்தை பிரதிபலிக்கிறது .மகி.

    பதிலளிநீக்கு
  2. அண்ணா சொல்ல வார்த்தை இல்லை அண்ணா ...மிக அருமையா சொல்லி இருக்கீங்க அண்ணா ...அண்ணா இந்த தங்கையின் ஆசை அண்ணா உங்கள் கவிதை எல்லாருக்கும் போயி சேரனும் என்று... அண்ணா கண்டிப்பாக அதை படிக்கும் ஒருவரை அல்ல பலரை மாற்றும் அண்ணா ......

    பதிலளிநீக்கு
  3. நன்றிகள் உங்கள் இருவரின் கருத்துக்கும் .

    பதிலளிநீக்கு