13 நவ., 2011

இலையாய்...கிளையோடு என் வாழ்வு
கிளிகளோடு சில நேர உறவு


கதிரவன் என் முகம் பார்த்து
கதிர்கள் சிவந்ததுண்டு


மழைத் துளிகளும் 

முதலில்
என் மீது முத்தமிட்டு,
பூமிக்கு விழுவதுண்டு


வண்டுகளின்
காமம் கண்டு வெட்கப்பட்டு  குலுங்கி 
உதிர்வது உண்டு 

நான் உதிர்ந்தாலும்,
உரமாய் உருமாறி...


மீண்டும் கிளையோடு
இலையாய் பிறப்பதுண்டு!===============================================


உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

3 கருத்துகள்:

 1. ''....நான் உதிர்ந்தாலும்,
  உரமாய் உருமாறி...

  மீண்டும் கிளையோடு
  இலையாய் பிறப்பதுண்டு!...''
  good lines. congratz.
  Vetha.Elangathilakam.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. தோன்றிய அனைத்துக்கும் அழிவில்லை என்னும் உங்கள் விளக்கம் அற்புதம்

  பதிலளிநீக்கு
 3. கோவை கவி,சந்திரகௌரி,உங்கள் இருவரின் கருத்துக்கு நன்றி ,

  பதிலளிநீக்கு