5 நவ., 2011

முரண்...ஜாதிப்பூக்கள் 
சங்கமாய் மாலைக்குள்

ஜாதி சங்கங்கள் 
பல பிரிவுகளாய் வீதிக்குள்

பூக்கள் ஒன்றாய் 
மாறியதால் மாலையாய் 
மாறியது.

பல ஜாதிகளும் 
மதங்களும் தோன்றியதால் 
மனித நேயம் 
மாண்டது.

அடுத்தவன் வளர்ச்சிக்கு 
அணைப்போடுவான்

மனிதனையே 
அறுத்தும் பலியிடுவான்.

தடுத்தவன்  மேல்  பழிப்
போடுவான்.

எல்லாம் சுயநலம்
தான் வாழ 
மிருகமாய் மாறிய இவன் 

மனித நேயம் பேசி 
வாழ்வான்.

2 கருத்துகள்:

  1. மிக மிக அருமை அண்ணா ......---வருங்கால சந்ததிக் காவது சிறிதேனும் மனித நேயத்தை போதிக்கனும் அண்ணா ...சாதி, மதம் ,ஊழல் ல்லா சமுதயம் தோன்றனும்...அண்ணா உங்கள் கவிதை சமுகத்தின் அவல நிலையை களைய முயற்ச்சிக்கும் ஒரு கருவி அண்ணா,,,

    பதிலளிநீக்கு
  2. இறைவன் நாடினால்,நமது உறவுகள் உணர்வுகள ஒன்றாய் மாறினால் நிச்சியம் அமையும்.உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தங்கையே.

    பதிலளிநீக்கு