5 நவ., 2011

வல்லரசு கனவுக்கு...


தொலைக்காட்சியின் 
ஆதிக்கம் 
அணைத்துக்கொண்டது 
வீதியெங்கும் 

வீட்டுக்கு வீடு.
விரித்தக் குடையாய் 
விஸ்வரூபம்.

திரைத்துறை 
சின்னத்திரைக்குள் 
அகப்பட்டு 
அடக்கப்பட்டு விட்டன.

வண்ண தொலைக்காட்சிப் 
பெட்டி இலவசமாய் 
தந்ததால் 
குடைக்குள் வீடுகள்.

வீடுக்கு வீடு 
குடைகளும் ,
சின்னத்திரைகளும் 
சிரிக்கிறது.

கை அலைபேசிகளும் 
மடி கணினிகளும் 
கிராமத்தின் 
அங்கமாய்.

நாளை வல்லரசு
கனவுக்கு உதாரணமாய்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக