8 நவ., 2011

கேள்வியோடு நிகழ்காலம்..



நிகழ்காலம் போர்க்களமாய்
மாறியது.ஏமாற்றியது

எதிர்க் காலம் கேள்விக்குறியாய்
இருக்கிறது!பயமுறுத்துகிறது.

பொற்காலம் இறந்த காலமாய்
போனாலும் மறைந்தாலும்..

பொற்காலமாய் இன்னும் 
புதையலாய் உள்ளது.

மாமன் மச்சான் உறவுகள்
கூட்டு வாழ்க்கை
மனம் மகிழும் தோட்டம்
பெரிய வீடு 
வாசல் திண்ணை 

அன்பும் பாசமும்
இனித்து ஒளி வீச
விடலைகளின் ஒலிகள் முழங்க,
வசந்தக் காலமாய் 
பொற்காலம்.

அடுக்கு மாடிக்குள் 
திணித்து திணறி 

நாம் இருவர்
நமக்கு ஒருவர் என்ற
துளிப்பாவாய் இன்று

கலாச்சார மாற்றமும்
வருமான தேவைகளும்
பொற்காலத் தேவதையை
கொன்று...

நிகழ்காலத்தை
போர்க்களமாய் மாற்றியது.

மீண்டும் வருமா 
பொற்காலம்
மீட்டுத் தருமா  
வருங்காலம்
கேள்வியோடு 
நிகழ்காலம்...

========================================================================
உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.உங்கள் ஊக்கமே எனது ஆக்கமாய் மாறட்டும்!

2 கருத்துகள்: