3 நவ., 2011

தன் வலைக்குள்

இவளை பார்க்கும் 
போதெல்லாம் 
ஒரு வித ஈர்ப்பு

தொட்டுப் பார்த்து 
தட்டிப் பார்ப்பதும் 
எனது வழக்கம்.

இவளை அடைய 
ஒரு ஆசை 
வருமானமோ 
போதவில்லை.

சேமிப்புக் கணக்கில் 
வரவுவைத்து 
இவள் வரவுக்கு 
காத்திருந்தேன் .

அந்த நாளும் வந்தது 
பேரம் பேசி 
ஒரு 
விலை பேசி,
முடித்து விட்டேன்.

மனதுக்குள் ஆனந்தம் 
நோகமால் எடுத்துவந்தேன்
இன்று!

தனிமை 
இரவுக்குள் இருக்க 
பதட்டத்தோடு 
என் மடிக்குள் 
வைத்து 
மேலாடையை 
அவிழ்த்தேன் ...

கருப்பு நிற வைரமாய் 
அங்கம் சிரிக்க 
விரித்தேன் 
அவள் மேனியை ....

மின்சாரத்தொடு 
தொடர்புக் கொடுத்து 
இயக்கினேன் அவளை 

விண்டோஸ் 7  என்று 
சிரித்த  முகமாய் 
தன் வலைக்குள் 
என்னை இணைத்தாள்.

இந்த மடிக் கணினி!


3 கருத்துகள்:

 1. சகோதரா நான் முதலே ஊகித்து விட்டேன் இது தான் என்று..ஆகா..கா...வாழ்த்துகள்..வாழ்த்துகள்...
  வேதா. இலங்காதிலகம்.
  http://www.kovaikkavi.wordpress.com

  பதிலளிநீக்கு
 2. ஆசைகளின் அணிவகுப்பாய் உங்கள் கவிதை வரிகள்.தொடருங்கள்.
  நன்றி
  யோகி.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் இருவரின் கருத்துக்கு ,ஊக்கமான வரிகளுக்கும் நன்றி .நன்றி .

  பதிலளிநீக்கு