3 அக்., 2011

நெருப்பாய் என்றும்....


சமுக கனவுகள் காண்பவர்களில்
நானும் ஒருவன்.
அக்கரைவுள்ள இந்தியன்!

நிஜத்தில் பதிந்த மொட்டுக்கள்
பொய்களாய் மாறி
கனவுகளாய் கலைக்கபடுகிறது.

ஐந்தாண்டு நடத்தப்படும்
ஆட்சிக்கு ,நானே கனவானேன்.
கருவானேன்!

ஒட்டு போட்டவுடன் நான்
கரைந்து போனேன்

களைந்து போனேன்.
காகிதமாய் கசக்கி எறியப்பட்டேன்!

நேற்றைய
ஆளும் கட்சி,
இன்று 
எதிர் கட்சியாய் போனது
எதிர் காட்சியாய் மாறியது...


வாக்கு வாதம் வந்ததால்
சொன்ன  வாக்கும் 

 மறைந்து போனது,

கனவுகள் கரைந்து போனது
சொல்லிப் போன வாக்கும்,
எனது வாககோடு 

களவு போனது.

மனசாட்சியோடு பதவி ஏற்றம்.
என மனசே இல்லாம் நாடகம்
அரங்கேற்றம்.

ஐந்தாண்டுக்கு ஒருமுறை
நானும் மாற்றம் வரும் என்று,
மாறி வாக்கு போடுகிறேன்,
மாற்றம் ஏமாற்றமாய் தொடர 

நானே ஒவ்வொரு தேர்தலில் 
தோற்று போகிறேன்

கனவுகள் இன்னும் 

கனவாய் இருக்கிறது 
மனதில் எறியும்நெருப்பாய் 
நிறைவேறா ஆசையாய் 

என்றும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக