3 அக்., 2011

கண்ணீரோடு ...

இருந்ததை,இழந்து,
இருப்பதில் நல்லதை,
அணிந்து ,வாழும் நிலமை

தமிழ் மொழிக் கற்றதால்
என்னவோ
அகதிகள் என்ற அடைமொழி,

அடுக்கி வைக்கப்பட்ட
மூட்டைகள்போல்,
இருக்குமிடத்தில்!

வக்கிர பார்வைகளை,
மறைக்க, தடுக்க நிலையறியா
சூழ்நிலைகளை...
கிழிந்த ஆடை
சொல்லும் எங்கள் நிலைமையை,

இந்த நிலைக்கு ,
விடை அறிந்தும்,
உலகம் வேடிக்கை
பார்க்கும் நிலையில்,......

நாங்கள் சிந்தும்,
கண்ணீர் வேதனை போக்கும்
புதிய வழியை காட்டும்
என்ற நம்பிக்கையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக