தேத்தல் சுனாமி
தமிழ் நாட்டில் ஐந்தாண்டுக்கு
ஒரு முறை வந்து போகும்!
மாற்றங்களை தந்து போகும்.
தன்னிலை விளக்கம்
சொல்லிவிட்டுப்போகும்!
நேற்றைய அழுக்குகளை,
இன்றைய கூவம்
கைத்தட்டி கேலி செய்யும்!
வரிகளை எல்லாம் வாரிசாக்கும்,
கேட்டால்....
கஜனா காலி என்று கூறும்!
கடல் சுனாமி
மரணத்தை தந்தது!
தேர்தல் சுனாமி?
விடையைத் தேடி,
விலாசமே இல்லாத
வாக்காளன்!
_________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக