3 அக்., 2011

பயம் போக்கினால்...



பாம்பு என்றால் 
படையும் 
நடுங்குமாம்,பழமொழி,
சொல்லு 
பாம்புக்கும் நடுக்கம்,
பாப்பாவை 
கண்டால் 
இங்கு!

பயம் போக்கினால் 
பாம்பும் ,சிறு புல்!
பாப்பாவை 
பார்த்து,
புரிந்துக்கொள்!

தில், மனதிற்குள் 
இருந்தால்,
வாழும் 
வாழ்க்கை 
வெற்றியின் திறவுக்கோல்.

கோழைத்தனத்தை 
மாற்றிக்கொள்
குழந்தையாய் மாறிக்கொள்!

_________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக