15 அக்., 2011

மருதநாயகம் என்ற சிங்கத்தின் கதை (புதுக்கவிதையாய் )



சிவகங்கை,பனையூர்
வீரத்தின் முகவரியாய்,
முன்மொழிந்தது!

பலவகை,விளையாட்டுக்களில்,
தான்,தகுதிப் பெற்றாலும்
ஈர்த்தது போர் வீரனாய்,
கான்ஷாகிப்பை!

இந்த வீரத்துடனே
மருத நாயகம் என்ற
பெயரில் வெற்றி நாயகனாய்,
பவனிவந்தார்!

மராட்டிய மன்னனின்
ராணுவத்தில் தன்னை இணைத்து,
முதல் ராணுவ அனுபவத்தை கொண்டு
பின் .....

பிரெஞ்சுப் படையின்
போர் புலியாய்,அவதரித்து,
முக்கிய பதவிகளில்
அடைக்கலமானார்!

காலத்தின் சூறவெளி,
கருத்து வேறு பாடுகளால்,
இவரையும்,திசை மாற்ற,
ஆங்கிலேயே சூழ்ச்சிக்கு,
இரையானார்!

ஆங்கிலேயப் படையில்
இணைந்தவுடனே,
ராபர்ட் கிளை அனுமதியுடன்

மைசூர் சிங்கத்துடன்,
இந்த சிங்கத்தை,மோதவிட்டு
தனது ராஜதந்திரத்தை,
செய்வனே செய்தனர் ஆங்கிலேயர்கள்!

நாவப் கொண்ட துரோகத்தோடு
திட்டமிட்ட சதியில்,
திண்டுக்கலில் ,சிங்கம் ஒன்று,
தோற்றது!
மருத நாயகம் சிங்கம் வெல்ல,
ஆங்கில சூழ்ச்சிகள் சிரித்தன!

சூழ்ச்சிகள் தொடர,
புலித் தேவனுக்கு போர்தொடுக்க,
தோல்வி கொண்ட சிங்கத்தை,
சீண்டிப் பார்த்ததால்,
மீண்டும் போர்,
நெல்கட்டான் செவ்வல் அருகே போரிட்டு
பூலித்தேவனை வென்றார்.

தன்னை ஆதரித்த
பிரஞ்சு படையே தோற்க
செய்த வல்லமையைக் கண்டு,
கவர்னராக நியமித்தனர்.
ஆங்கிலயேர்!

பொறமை இங்கு எட்டிப்பார்த்து,
நாவப் மனதில்.
எனக்கு சமமாய்,
எனது படையில் இருதவனுக்கு
பதவியா என்ற நிலையில்.
பனிப்போர் நடக்க,

சமயம் பார்த்த ஆங்கிலேர்கள்,
தீ மூட்ட ,இன்னும் பரவியது.
மருதநாயகம் ,தனது தவறை
இது காரணமாய் ,அறிய ,
காட்சி மாறியது ,களம் மாறியது!

நாவப்க்கும் ,ஆங்கிலேயர்களுக்கும்,
கப்பம் கட்ட மறுக்க,
விவேகம் பெற்றது வீரம்!


கோவத்தின் உதயம்
ஆங்கிலேய கொடி எரிக்கப்பட்டு
மஞ்சள் கொடி பறக்கப்பட்டது!

விவேகமும் அங்கு கைகொடுக்க
எதிரிக்கு எதிரி நண்பன் என்ற
கொள்கையை கையாள,
மஞ்சள் கொடியோடு
பிரெஞ்சுக்காரர்களின் கொடியையும்
பறக்க விட்டார் !

நவாப்பின் கோபம் சினம்கொள்ள
அடுத்து அடுத்து போர்,
எல்லாம் ஆங்கிலேயர் ,
புறமுதுகிட்டு ஓட
சிங்கம் ஒன்னு புறப்பட்டதே
வெற்றிக்கு என்ற கர்ஜனையோடு,
நடமாட்டம்!

வாள்கள்,பேசப்பட்டன,
மருத நாயகத்தின் கையில்.
முன்னால் நண்பன்,
ஆங்கிலேய தளபதி பிரஸ்ட்டன்
சுடப்பட்டு படுகாயமடைந்தார்.
பின்னர் உயிர் துறந்தார்.

ஆங்கிலேயர்களை
எதிர்த்து போரிடும் செய்தியும்,
அதன் வெற்றிகளும், மைசூர் சிங்கம்
ஹைதர் அலி அறியவே
பழைய பகையை மறந்தார்.

மண்ணுரிமை போரில்,
தனது நிலைக்கு மருதநாயகம்
வந்ததை வரவேற்று
சிங்கம் ஒன்று சிங்கத்துக்கு
வாழ்த்து செய்தி அனுப்பியது!

தந்திரமும்,வஞ்சகமும்
கைகுலுக்க,
சிவகங்கை சீமையின்
விஷமியான தாண்டவராயன்
விலாசத்துடன்,களமிறங்கியது!

இன்று நடக்கும் போரில்
பொருளாதார தடைகள்போல,
திட்டமிட்டு மதுரை போர்
ஆங்கிலேயர்களால்,
மருதநாயகத்தின் கோட்டை,
நகரிலிருந்து துண்டிக்கப்பட்டது,!

உணவு,ஆயுதங்கள், மருந்துகள்
கூட நுழைய விடாமல் தடுக்கப்பட்டது.

நானும், நீயும் வேறல்ல.
நமது படையும், நாடும் வேறல்ல”
என்று சகோதர உணர்வோடு
ஹைதர் அலி கடிதம் எழுதி
தனது ஆதரவை வழங்கினார்.

போரில் வெற்றி மறக்கப்பட்ட
நிலையில் வழக்கம்போல்
ஆங்கிலேயே எண்ணம்
தந்திரத்திலும்,அதன் மூலம்,
வஞ்சம் தீர்க்க திட்டமிட்டது!

தாண்டவராயன்,உதவியோடு,
கான்சாஹிபின் அமைச்சர்களில்
ஒருவரான சீனிவாசராவை
வலையில் வீழ்த்தினர்.

கட்சி மாற காட்சியும் மாறியது,
மெய்க்காவலர்களான பாபாசாஹிப்,
சேகுகான் உள்ளிட்டோரையும்,
பிரதான தளபதியும், பிரெஞ்சு
அதிகாரியுமான மார்ச்சந்த்தையும்
துரோக வலையில் இணைத்தனர்.

நண்பர்கள் ,துரோகியாய்,
மாறியது தெரியாமல்
ரமலான் மாதம்,தொழுத நிலையில்,
துரோகிகள் சிங்கத்தை சிறைப்பிடித்தனர்!

காரணம் அறிந்து சிங்கம்
வேண்டுகோள் அறிவித்தது,
எதிரிகளிடம் ஒப்படைக்காமல்
நண்பர்களே ,உங்களால்
இறப்பது எனக்கு சுகம்,
என்னை கொல்லுங்கள்,என்று,
வேண்டுகோள் கொடுத்தது!

கோழைகள் ஒன்று சேர்ந்து,
சிங்கத்தை ,படியவைக்க
கட்டப்பட்ட நிலையில்,
பட்டினி போட்டு
படிய சொன்னது,
மன்னிப்புக் கேட்க சொன்னது.

வீரம் மனம் மறுக்க
வழக்கம்போல ஆங்கிலேய
மனம் வஞ்சகம் தீட்ட ,
இவருக்கு தண்டனையில்லை
நவாப் முன்னிலையில் சொல்ல
நவாப்பை கோவம் கொள்ள...


தூக்கு தண்டனை என்று
சொல்ல செய்தது!
மதுரைக்கு மேற்கே
சம்மட்டிபுரத்தில் உள்ள
ஒரு மாமரத்தில் சிங்கம்
தூக்கிலிட கொண்டுவரப்பட்டார்,

அச்சமுள்ள மனதுக்கு அல்லவா
பயம் மறைந்திருக்கும்.
இந்த சிங்கம்
மருதநாயகம் முகத்தில்
பயமுமில்லை, அச்சமுமில்லை,

தூக்கிலிடப்பட்டதும்
அவர் மரணிக்கவில்லை.
கயிறும் ,மருதநாயகத்தின்,
இறப்பை ஏற்காமல்,
அறுந்து விழுந்தது!

புதிய கயிறு கட்டப்பட்டது
மீண்டும் தூக்கிலிடப்பட்டார்,
அப்போதும் உயிர் பிரியவில்லை.
நான் யோகாசனம் பயின்றவன்.
கழுத்தை உப்ப வைத்து,
பல மணிநேரம் மூச்சை அடக்கும்
ஆற்றல் கொண்டவன் என்று
அந்த நிமிடமும்
தூக்கு கயிற்றில் சீறினார் மருதநாயகம்.
எதிரிகள் குலை நடுங்கினர்.
வஞ்சகம் வெற்றி பெற
இறுதில் மருதநாயகம்
மரணம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மருதநாயகம் ,இறந்த பின்னும்
துரோகிககளின் தூக்கத்தில்
கனவிலில் கூட
மருநாயகம் போர்தொடுக்க,
எங்கே மீண்டும் உயிர் பெற்று
விடுவாரோ என்ற அச்சநிலை....

தலை, கால், கை என
பல பாகங்களாக வெட்டி யெடுக்கப்பட்ட
சிங்கத்தின் உடல் பல்வேறு
ஊர்களுக்கு தனித்தனியாக
அனுப்பப்பட்டு அடக்கப்பட்டது.

ஆம், செத்த பிறகும்
வீரன் மருதநாயகத்தின்
உடலை கண்டு ஆங்கிலேயர்களும்,
துரோகி ஆற்காடு நவாப்...
முகம்மது அலியும் நடுங்கியுள்ளனர்.

வீரனின் உடல்
தமிழக முழுதும்
வீரத்தின் வீரியம்
விதையாய் விதைத்து
மரமாய் வளர்ந்திருக்கு!

இவரை போன்ற
மாவீரனின் உடலால்,
உதிரத்தால் இன்னும் வீரம்
மறையவில்லை தான்
இந்த மண்ணில் இன்னும் ...!

2 கருத்துகள்:

  1. //தூக்கு தண்டனை என்று
    சொல்ல செய்தது!
    மதுரைக்கு மேற்கே
    சம்மட்டிபுரத்தில் உள்ள
    ஒரு மாமரத்தில் சிங்கம்
    தூக்கிலிட கொண்டுவரப்பட்டார்,//

    arumai...vaalththukkal

    பதிலளிநீக்கு
  2. நன்றி இளவலே .உங்கள் மறுமொழிக்கு!

    பதிலளிநீக்கு