வெண்மேகம் மலைமேல் உருகி,
காதலில் தழுவி,தடைகளெல்லாம்,தாண்டி
வந்து விழுந்ததை சொன்னார்கள்,
நீருக்கு வீழ்ச்சி!
நிலத்துக்கு, வரப்புக்கு,வரவாகி,
இணை வாய்க்காலை உருவாக்கி,
நீர் வீழ்ச்சி என்னும் சொல்லோடு,
விழுந்தாலும் வீழ்ச்சிக்கும் வரலாறு!
தமிழ் நாட்டுக்கு வந்தால் மட்டும் தகராறு ,
என்ற வரையறை கோட்பாடு,
மழைநீரை சேமிக்க மறுக்கும் நிலைப்பாடு,
இருக்கும்வரை தண்ணீருக்கு கூப்பாடு!
ஆகஸ்டு 15 மட்டும், இந்தியன் என்ற சொல்லோடு,
வாழும் பரிதாப நிலையைப் பாரு!
_________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக