5 அக்., 2011

புதுத்தெரு !


புதுத்தெரு !
வரலாறுகளை ,தனக்குள் 
உள்ளடக்கி,இன்று 
இடிபாடுகிடையில்,
பல உண்மைகள் 
புதைந்து இருக்கு .


வசதிப் படைத்த சீமான்கள் 
வாழ்ந்த வீடுகள் எல்லாம் 
இடிபாடுகளோடு 
இன்று பொலிவு இழந்த
நிலையில்...


ஊரை ஆண்டவர்களும்,
உலகம் போற்றும் மேதைகளும்,
தன் சுயரூபம் மாறித்தான்
போனார்கள்!
வளரும் தலைமுறைக்கு,
அறியமாலே  போனார்கள் .

புதுத்தெரு என்னும் 
பூலோகத்தில் 
பூர்வீகம்  அழிந்துப்போனது 

வரலாறுகளை புரிந்துக்கொண்டால் 
அந்த தெருவுக்கு 
ஒரு வீரியமுண்டு 
என்பதை உணர்ந்துக்கொண்டால்...

வீரமும் ,விவேகமும்,
கலந்த தெரு 
இந்த புதுத்தெரு என்று 
மார்தட்டிச் சொல்லலாம்!






1 கருத்து:

  1. காதலும் வீரமும் கரைந்த தெரு... கன்வாய்.. நன்றாக எழுதி இருக்கீங்க கலைநிலா. அருமை.. நம் வாரிசுகளுக்கு ஒன்றும் தெரியப்போவது இல்லை. உண்மை.. நாம் எதாவது செய்தாக வேண்டும்...

    பதிலளிநீக்கு