இளைஞனே!
புதிய விடியலை பார்க்க
உன் பாதயை மாற்று!
விதியை அறிந்தாலும்,
விடுமுறையில்லா,வேகமும்
விவேகமும்,உனக்குள் இருந்தால்,
விடைகள் உன்னைத் தேடி வரும்.
வெற்றியின் விலாசம்,
உனதாகும் ,உனக்கே உரித்தாகும் .
இருளை அகற்றும் விடியலின்
கதிர்கள் தெரியும்.முயன்றுப் பார்!
உனக்கான வேகத்தை
குறைக்கும்,உன்னை
குறிவைத்து தாக்கும்,
காதலை விட்டும்...
காமத்தை மறந்தும்...
கோபத்தை துறந்தும்...
வாழ்ந்துப் பார்!
உனக்குள்ளே இருப்பதை அறிந்து
உன்னையே மாற்றிப் பார்!
உலகம் உன்னை போற்றி
உன்னையே வாழ்த்தும் பார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக