16 அக்., 2011

வாக்காளன் மனம்...

இருப்பதில் எடுத்து 
கொடுத்தால் ஈகை மனம்.
இருப்பதில் எடுக்க 
கொடுத்தால் இலவசம்.

தன்   வசம் ஈர்க்க 
இலவசம், இங்கு ஆயுதம்!
இலவசமென்றாலே
எல்லாவேற்றையும் மறக்கும்,
வாக்காளன் மனம்!

ஓட்டுக்கும் கை நீட்டும் இவன் 
வீட்டுக்கு வீடு இலவசம் என்றால் 
இலவசம் கொடுக்க ஏது பணம்...
கேட்குமா வாக்காளன் மனம்...!

4 கருத்துகள்:

 1. இலவசம் பற்றிய அருமையான இந்தப்படைப்பால் என் மனசும் இவர்வசமானது உண்மை...

  பதிலளிநீக்கு
 2. அருமையான வரிகள் அசத்துங்கள் கலைநிலா!

  பதிலளிநீக்கு
 3. கலைநிலாவிற்கு வாழ்த்துக்கள்.
  அருமையான கவிதை.

  பதிலளிநீக்கு
 4. மறுமொழிகள் தந்து எனக்கு உற்சாகம் தரும்
  நண்பர்களுக்கு நன்றி .உங்கள் ஊக்கமே எனது
  ஆக்கம் .

  பதிலளிநீக்கு