16 அக்., 2011

விடுதலை நோக்கிய பயணம்,

விடுதலை நோக்கிய பயணம்,
விபரீதம் அறிந்த போதும்,
விடியல் வேண்டி நடத்தும்!


மரணம் கூட விரும்பும்,
மனங்கள் கொண்ட இனம்.
வாழ்க்கை முழுதும் துயரம்!

இருந்தும் உரக்க சொல்லும்,
வானம் தொடும் தூரம்.
விடுதலை ஒன்றே எங்கள் மந்திரம்!

வாழும் வாழ்க்கைக்கு அர்த்தம்,
இறந்த உறவுகள் எல்லாம்
விதைகளாய் ஆனது என்றும்...

மீண்டும் முளைக்கும்,தழைக்கும்,
எங்களுக்கு பிள்ளைகளாய் பிறக்கும்!
விடுதலை நோக்கிய பயணம்,
விடியல் வேண்டி நடத்தும்,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக