17 அக்., 2011

வாழ்க்கை மிச்சமிருக்கு.



போரின் குணத்தோடு பிறந்தாயா !
மானுடம் அழிக்க தான் வளர்ந்தாயா!
மண்ணுக்கும் பொருளுக்கும் ஆசையா!
இது தான் உனது வாடிக்கையா!

ஆதிக்கம் ஒன்றே உன்
நிலையாய் போனதால்,
உயிரின் நிலை அறியவில்லை.
இந்த அவல நிலை போக்க
எந்த கைகளும்  முன்வரவில்லை.

கண்ணீர் சிந்தியே எங்கள்
கண்களும் வெளுத்துவிட்டது.
எங்கள் உடல்களும் மெலிந்துவிட்டது.
உனது போரின் செயலால்
கொலைகளும் இங்கு மலிந்து விட்டது.

கொடுமைகள் போக்க
சர்வ தேச உதவிகள் மறுக்கப்பட்டது.
இருந்தும் நம்பிக்கை மட்டும்
மிச்சமிருக்கு,அச்சம் போக்கும்
என்ற எண்ணமிருக்கு.

எங்கள் வழிமுறைகள் மீது
உறுதியிருக்கு!
உருகுலைந்தாலும்,வளரும்,
வரும் தலைமுறை மீது
வெற்றியிருக்கு!
இதை நம்பித்தான்
எங்கள் வாழ்க்கை மிச்சமிருக்கு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக