11 அக்., 2011

பேருந்து பயணம் !கூட்டத்தோடு .
சேர்த்துக்கொள்ளும்
காலை நேர
அரசு பேருந்து !

வேர்வை நாற்றம்,
அழுக்கு உடல்,
வாராத தலை,
திருப்பித் தராத
சில்லறை பாக்கி ....

காமுகனின் சிற்றின்பம் ,
திருடர்களின் கைவரிசை,
குழந்தையின் அழுகை,
குமரியின் அழகு....
கொடுக்க வந்தும்
கொடுக்கப்படாத காதல் கடிதம்.....

வேலைக்காக சிலர்
வேதனையோடு சிலர்,
வேடிக்கைப்பார்த்தவண்ணம் சிலர்,
காதல் வாகனமாய் சிலரும்,
எமன் தருமனின் வாகனமாய்
எண்ணத்தோடு சிலரும் .....
இருந்தாலும்.....

பேருந்து பயணம்
நமக்கு தொடர்கதை..
எல்லாவற்றையும் மறந்த
பயணம் ,வாழ்கையின் ஒரு அங்கம் !

வெற்றியின் இலக்கையடைய,
மனதுக்குள் ஆயிரம்
வந்து போனாலும்,
நம்மோடு கடந்து போனாலும்,
நினைக்கும் துரத்தை,கடக்க
வாழ்ந்துபார்.

வாழ்க்கை உனக்குள்ளிருக்க,
தடைகளை கடந்து,
தேடலை துறந்து,
இருப்பதோடு வாழ்ந்துபார் !

வாழ்க்கை உனது கையில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக