11 அக்., 2011

கூட்டாஞ்சோறு!
இளமைக் காலத்தில்,
சமையல் அறியாத நேரத்தில்,
நடத்திய விருந்து!

வெந்தது பாதி,
வேகாதது பாதி,
இருந்தும் உண்ட விருந்து!

அரிசியின் ரகங்கள்
கூட்டணி சேர
தோப்புக்குள் விருந்து !

விடலைகளின் மகிழ்ச்சியில்,
உப்பு ,காரம், மணமில்லாமல்,
மனம் விரும்பிய விருந்து!

யார் அங்கே!
விடலையாய் நான் மீண்டும் மாறிட
அழைத்துப் போங்கள்!

இந்த அவரச உலகத்தை
நான் மறந்து வாழ!
என்னை நானே பார்த்துக்கொள்ள !

தொலைத்துவிட்ட இன்பத்தை,
அதன் பிம்பத்தை பார்த்து மகிழ,
என்னை அழைத்துப் போங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக