பள்ளிவாசல் அருகிலிருக்கும்,
முச்சந்திக்கு மறு பெயர்
சாவடி!
எங்கள் வாலிப தேசத்தின்
வசந்த மரமாய்
இந்த சாவடி!
ஆறடி ஜப்பான் வீடுத் திண்ணையும்
குண்டாரி வீட்டுத் திண்ணையும்,
சந்தோஷங்களை கொட்டி
தாலாட்டு பாடியது என்றால்
பொயில்லை!
எங்களது வாலிபத்தின்
பல மணித்துளிகளை
இன்னும் நாங்கள் அங்கு தான்
சேமித்து வைத்திருக்கிறோம்!
தூங்காமலே நாங்கள்
கண்ட கனவுகள் தான்
எத்தனை ,எத்தனை ...
எண்ணங்களையும்,
எங்களையும் சேர்த்து வைத்தது
இந்த திண்ணை தான்!
எங்கள் சிரிப்புகளை,
சில்லறையாய் சிந்தியதும்
இங்கு தான்!
கடந்த வாலிபத்தை,
கவிதையாய் சொல்லும்!
நான் இந்த திண்ணையை
கடக்கும் போது !
பழைய நினைவுகளை.
நினைக்கும் போது
நெஞ்சத்தை நெகிழச்செய்யும்!
அமீர் ,இப்திகா,,ரபி,ஜகாங்கீர்,
ஜவகர்,ஜகாங்கீர்,ஆசாத்,அலாவுதின்
தவக்கல்,முத்தார்,மாலிக்,அஜிஸ்,
ஜப்பார்,அக்கிள் ,ஹாஜா,என
எல்லோரும் ஒன்று கூடி,
வட்டசபை மாநாடு ,
நடத்திய திண்ணை!
இன்னும், எனக்கும்,
என் நண்பர்களுக்கும்,
அதிசியத்தின் ஒன்று தான் !
இந்த திண்ணை எங்களின்
வாலிபத்தின் போதிமரம் !
நாங்கள் மறையும் வரை
வாலிபத்தின் போதிமரம் !
நாங்கள் மறையும் வரை
எங்கள் வரலாறுகளை சொல்லும்.
பழையதை மாறமல்,மாற்றாமல்,
மறக்காமல் இந்த திண்ணையும்
எங்களை போலவே, இன்றும் அப்படியே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக