விரல் நீட்டி சொன்னேன்
அடுத்தவர்களின் குறைகளை.
நான் சொல்லும் போது
எனது விரகள், மூன்றும்,
என்னை பார்த்து,
சொல்லும் எனது குறைகளை!
குறைகள் இல்லாத மனிதனில்லை
குறையை மறைக்க,
குறை சொல்லாதவருமில்லை.
குறை வாழ்வின் கறை
என்றால் பொயில்லை!
குறையின் கறையை மறைக்க,
கைக்கொடுப்போம்.
நிறைகளை கொண்டு
குறை சொல்ல
இனி விரல் நீட்ட மறுப்போம்,மறப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக