வாலிபர்களே!
அங்கீகாரம் கிடைக்க
நாளாகலாம்
அவசரம் வேண்டாம்.
அலட்சியமும் வேண்டாம்.
எதிர்பார்ப்பு தேவை தான்
அதுவே எதிரியாக
போகக்கூடாது !
சில தோல்விகள் கூட
சிறப்பு பெரும்.
சில வெற்றிகள் கூட
அச்சத்தை தரும்.
உலகம் ஒரு நாள்
உன்னைப் பார்க்கும்
உயரத்தில் வைக்கும்!கவலை வேண்டாம்.
துன்பம் எனபது
மேல் ஆடை போன்றது.
நீ நினைத்தால்
கழற்ற முடியும் உன்னால்!
இன்பம் என்றால்
இதயம் போன்று,
உங்களுடன் தான்
இருக்கும், துடிக்கும்.
இந்த பூவுலகம்
கண்ணாடி போன்றது,
உன்னாலும் முகம்
பார்க்கமுடியும்.
காதல் மட்டுமே
வாழ்க்கை ஆகாது!
அதையும் தாண்டி
நிறைய இருக்கு!
உன்னால் முடியும்
கண் திறந்து பார்!
உலகம் உன் கைகளில்...
very naice
பதிலளிநீக்குநன்றி தோழரே .
பதிலளிநீக்கு''...துன்பம் எனபது
பதிலளிநீக்குமேல் ஆடை போன்றது.
நீ நினைத்தால்
கழற்ற முடியும் உன்னால்!...''
நல்ல சிந்தனை. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
நன்றி உங்கள் வருகைக்கும் பாராட்டுக்கும்
பதிலளிநீக்கு