19 ஜன., 2014

மரம் மாறிய குணம்...















வெட்ட வெட்ட
மரம் வளரும்
மனம் கெட கெட
மனித நேயம் மறையும்...

இருப்பதில் எடுத்து
வாழும் மனிதன்...
இருப்பதில் கொடுத்து
வாழும் மரம்...

மரமாய் மனிதன்
மனிதானாய்
மரம்
மாறிய குணம்...

இல்லாத ஆடை ...


















வறுமையோடு வயிறு 
இறுக்க  உடைக்கு கூட 
வழியில்லா வேலை...

வேலைக்கு வேலை 
மாற்று துணி இருந்தும் 
பாவாடை இல்லாத ஆடை
மேலாடை இல்லாத ஆடை
இடைக்கு இடை ஆடை ....

தாலிகட்டு...












கூட்டத்தோடு மல்லுகட்டு 
ஜல்லிக்கட்டு
குடும்பஸ்தனாய் மாற 
தாலிகட்டு...

புகைத்து பார்த்தேன்...


















பணம்  கொடுத்து 
பாடை வாங்க 

புகைத்து பார்த்தேன் 
புதைக்க...

இழுக்க இழுக்க இன்பம்
இறக்கவே தூண்டும்..