முதல்வர் ஜெயலலிதா கொடநாடு சென்று தங்கியது குறித்து விமர்சனம் செய்தார்கள் என்றும், முதல்வரின் புகழுக்கு களங்கம் ஏற்படும் வகையில் விமர்சனம் செய்ததாக, தி.மு.க தலைவர் கலைஞர், தி.மு.க பொருளாளர் மு.க.ஸ்டாலின், பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் ஆகியோர் மீது சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி பொன் கலையரசன் முன்னிலை யில் இன்று விசாரணைக்கு வந்தது.
இதையடுத்து கலைஞர் அக்டோபர் 10-ம் தேதியும், ராமதாஸ் அக்டோபர் 9-ம் தேதியும், விஜயகாந்த் அக்டோபர் 15-ம் தேதியும் கோர்ட்டில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.
இவர்களது பேச்சை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் களுக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
நன்றி நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக